Take a fresh look at your lifestyle.

விஜய் படத்தைப் பார்த்த சென்சார் மறு ஆய்வுக்கு குழு

115

விஜய் படத்தைப் பார்த்த சென்சார் மறு ஆய்வுக்கு குழு

தேர்தல் ஆணையம் பார்வைக்கு செல்லும் ஜனநாயகன் படம்

ஓரிருநாளில் சான்று: தேர்தலுக்கு பிறகே வெளியாக வாய்ப்பு?
சென்னை, மார்ச் 19, அரசியலுக்கு வந்த பிறகு விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன்.இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்று தாமதமானத்தை தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இதனால் ஜனநாயகன் படம் தாமதம் ஆனது. ஐகோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வில்லை. அதன் பின்பு உச்ச நீதிமன்றத்தை பட குழு நாடியது. அதற்கு தணிக்கை வாரியம் சார்பில் தடை கோரப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகளை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. அதன் பிறகு மீண்டும் மறு தணிக்கை செய்யுமாறு சென்சார் போர்டுக்கு கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் அமேசான் நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்த ஓ.டி.டி. ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மும்பையில் தணிக்கை குழுவினர் ‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வு செய்து முடித்துள்ளனர். இதனால் இன்று அல்லது நாளைக்குள்
சென்சார் சான்று வழங்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.ஆனால் தேர்தலுக்கு முன்பு படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அரசியல் சார்ந்த கருத்துகள் ‘ஜனநாயகன்’ படத்தில் இடம் பெற்றுள்ளதால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்று சென்சார் போர்டு குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும்,படத்தின் நடிகர் விஜய்யின் கட்சி தேர்தலில் போட்டியிடு வதாலும்,தேர்தல் ஆணையத்திடம் படக்குழு அனுமதி பெற வேண்டி உள்ளது.இதற்காக ஜனநாயகன் படம் தேர்தல் ஆணையத்துக்குஅனுப்பப்பட இருப்பதாக
கூறப்படுகிறது . விஜய்அரசியல் பின்னணியில் ‘ஜனநாயகன்’ படம்உருவாகி இருப்பதால் தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து ரிலீஸ் செய்ய சொன்னால் மட்டுமே படம் வெளியாகும். இது தொடர்பான இறுதி முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்கு பிறகேஆனாலும் படம் ஏப்ரல்30-ந்தேதிக்கு முன்னர்வெளியாவது சாத்தியமில்லை என்கின்றன தேர்தல் துறை வட்டா ரங்கள்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 4-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் அரசியல் தாக்கம் ஏற்படுத்தக்கூ டியதிரைப்படங்கள் தேர்தல்காலத்தில் வெளியாவதைதேர்தல் ஆணையம் பொதுவாக கட்டுப்படுத்தும் நடைமுறை உள்ளது. எனவே தேர்தல் முடிவு வெளியான பிறகு ஜனநாயகம் படம் வெளியாக வாய்ப்புள்ளது.