Take a fresh look at your lifestyle.

கட்டுப்பாடின்றி செல்லும் வேன்கள்

127

கட்டுப்பாடின்றி செல்லும் வேன்கள்

தவெக 2வது மாநில மாநாட்டிற்கு வேன்களில் படையெடுத்து வரும் தவெக தொண்டர்கள்,

கட்டுப்பாடின்றி டோல்கேட் தடுப்புகளை இடித்து சென்றனர்.

 

நிழலை தேடும் தவெக தொண்டர்கள்

தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தியில் கொளுத்தும் வெயில்.

வெயிலின் தாக்கம் காரணமாக நாற்காலிகளுடன் நிழலை தேடி செல்லும் தவெக தொண்டர்கள்.

சீமான் ஒழிக – தவெகவினர் கோஷம்

சீமானை கண்டிக்கும் வகையில் தவெக மாநாட்டில் சீமான் ஒழிக என தொண்டர்கள் கோஷம்.

தளபதி என தவெகவினர் கத்துவது தலைவிதி என கேட்பதாக,

அண்மையில் தவெகவை கடுமையாக விமர்சித்திருந்தார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஸ்நாக்ஸ் விநியோகம்

மதுரை மாநாட்டிற்கு வரும் தவெக தொண்டர்களுக்கு காலை முதல் குடிநீர், ஸ்நாக்ஸ் வழங்கும் பணி தொடங்கியது.

ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை வாங்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.

காலியான குடிநீர் – மாற்று ஏற்பாடு

தவெக மாநாட்டு பந்தல் அருகே வைக்கப்பட்டுள்ள டேங்குகளில் காலையிலேயே குடிநீர் காலியானதால் தொண்டர்கள் கடும் அவதி.

மாற்று ஏற்பாடாக 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

விரைவில் டேங்குகளில் தண்ணீரை நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என நம்பிக்கை.

மதுரையில் இன்று நடைபெறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே அலைக்கடலென குவியும் தொண்டர்கள்!

 

கீழே கொட்டப்படும் உணவுகள்

தவெக மாநாட்டு பந்தலுக்கு வெளியே ரூ.100 கொடுத்தும் உண்ண முடியாத நிலையில் உணவு பொருட்கள் உள்ளதாக தொண்டர்கள் வேதனை.

உணவு பொருட்களை உண்ண முடியாததால் தொண்டர்கள் அவற்றை கீழே கொட்டி செல்கின்றனர்.

 

தவெக மாநாடு – சுங்க கட்டணம் இன்றி அனுமதி

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இலவச அனுமதி

இதுவரை 40,000 வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாக தகவல்