அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ ரீ ரிலீஸ்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ஐகானிக் ப்ளாக்பஸ்டர் படமான ‘பில்லா’, படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. விஷ்ணு வர்தனின் கதை சொல்லல், சர்வதேச தரத்திலான மேக்கிங் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தரத்தால் இந்தப் படம் இன்றும் பேசப்படுகிறது. படத்தில் கதாநாயாகியாக நடித்த நயன்தாராவின் வலுவான கேரக்டர் படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது. படத்தின் மற்றுமொரு பலம் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் ஆகும். தற்போது இந்த படம் 7.1 டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மெருகேற்ற பட்டு அஜித்தின் பிறந்த நாளான வரும் 1ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வெளியிட, சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது.
Next Post