சூர்யா படத்தில் இணைந்த பவானி ஸ்ரீ
ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் சூர்யா நடித்துள்ளார் .இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார் .அவர்களுடன் ராதிகா சரத்குமார், பாலிவுட் நடிகை ரவீணா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தற்போது வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த பவானிஸ்ரீயும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
Prev Post
Next Post
