Take a fresh look at your lifestyle.

பீப் -விமர்சனம்

2

பீப் -விமர்சனம்
நடிகை ஒருவரது தீவிர ரசிகராக இருக்கும் ராகவ், அந்த நடிகையை நேரில் சந்திப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவருக்கு பாலியல் தொழிலாளி யான யாமினி லக்‌ஷ்மணனின் நட்பு கிடைக்கிறது. யாமினியுடன் நட்பாக பழகி வரும் ராகவ், அவர் மீது அதிக அக்கறையும் காட்டி வரும் சூழலில், திடீரென்று யாமினி அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். அவரது மரணம் கொலை தான் என்பது உறுதி செய்யப்பட்டா லும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்காமல் போலீஸ் விசாரணை மந்தமாகி விடுகிறது. மறுபக்கம் தனது அதிசய சக்தியை பயன்படுத்தி கொலைக்கான பின்னனி மற்றும் கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ராகவ். இறுதியில் கொலையாளி யார் என்பதே படத்தின் மீதி கதை.கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராகவ், அதீத புத்திசாலி மற்றும் நம்ப முடியாத அறிவியல் சக்திப் படைத்த மனிதர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாமினி லக்‌ஷ்மணன் கவனம் பெறுகிறார்.ஐடி ஆச்சார்யா, பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா,நித்திஷ், பாலாஜி ஆகியோர் கதைக்கு உதவியுள்ளனர்.நம்ப முடியாத ஒரு விசயத்தை அறிவியல் பூர்வமாக சொல்லி, இப்படியும் நடக்கலாம்!என்று நாயகனின் சக்தியை விளக்கியிருக்கும் இயக்குநர் எல்.சண்முக சுந்தரம், அதனுடன் கிரைம் திரில்லர் சப்ஜக்ட்டை இணைத்து சொல்லிய விதம் படத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறது.பிரதீப் பத்ம குமார் ஒளிப்பதிவு மற்றும்பிரசாந்த் விஹாரி இசை ஓகே ரகம்.