வைப் ஏற்படுத்திய அனிருத்தின் ‘ஹுக்கும்’
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் “ஹுக்கும்” உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, கடந்த 23-ஆம் தேதி சென்னையை அடுத்த குவாத்தூர் மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று இந்த இசை நிகழ்வில் அனிருத் மேடையை அதிர வைத்தார்.ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படு த்தயது.ஹுக்கும் உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிந்துள்ளது.
Prev Post
Next Post