அன்பில் அவன்- விமர்சனம்
பணக்கார வீட்டுப் பெண்ணான ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்துக்குப் பிறகு மலைப்பகுதியில் சொந்தமாக ஒரு ஹோம் ஸ்டே தொடங்கி, கணவனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் அவரின் கனவு. அந்தக் கனவை நிறைவேற்றுவத ற்காக அசோக் செல்வனும், ப்ரீத்தி முகுந்தனும் தங்களது வேலையை விட்டு விட்டு இருந்த நகையை விற்று, கடன் வாங்கி மலைப்பகுதி யில் உள்ள ஒரு பங்களாவை வாங்குகின்றனர். தங்களது கனவு நினைவாகும் அந்த வேலையில் அந்த பகுதி எம்எல்ஏ கதிர் பாலு தனது அதிகாரம், ஆல் பலத்தை காட்டி மிரட்டுகிறார். இறுதியில் தங்கள் கனவு இல்லத்தை அந்த ஜோடி அடைந்ததா?இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. அசோக் செல்வன் அன்பான கணவராகவும் அதேநேரம் மனைவிக்காக எதையும் செய்ய தயங்காத ஆக்ஷன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவருக்கு இணையாக ப்ரீத்தி முகுந்தன் போட்டி போட்டு நடித்துள்ளார். எம்எல்ஏ கதிர் பாலு, இன்ஸ்பெக்டர் மகா டெல்லி கணேஷ், வழக்கறிஞர் சாபுமோன் ஆகிய மூவரும் வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளனர். ரேவதி கேரக்டர் மனதில் பதிகிறது. எனக்காக எல்லாத்தையும் விட்டு விட்டு வந்த தனது மனைவியின் கனவை நிறைவேற்ற துடிக்கும் கணவனின் கதையை மையக்கருவாக எடுத்துக்கொண் டு, அதில் ஆக்சன் ரொமான்ஸ் சேர்த்து படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ஆர். கார்த்திகேயன்.கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் கௌதமின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம்.
Next Post