Take a fresh look at your lifestyle.

அலபோலலோ பாட்டு ஹிட்டு:நடிகை பூர்ணா உற்சாகம்

49

அலபோலலோ பாட்டு ஹிட்டு:நடிகை பூர்ணா உற்சாகம்
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பூர்ணா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர்,தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்களில் நடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் ஒரு பாடலுக்கு நடனமாட தொடங்கி இருக்கிறார். மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம் பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு நடனமாடி தாக்கத்தை ஏற்படுத்தினார். தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் அலபோலலோ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னாஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அதேபோல் ஜெயிலர்-2 படத்தில் அலபோலலோ பாடலுக்கு பூர்ணா பாடியுள்ள டான்ஸ்ம் நடனம் வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து பூர்ணா கூறியது, “இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இந்த வாய்ப்பை வழங்கிய ரஜினி, இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியோருக்கு நன்றி. கனவை நிஜமாக்கிய இறைவனுக்கு நன்றி”என்று கூறினார்.