பிரபுதேவா,வடிவேலு இணையும் புதிய படம்
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவும், வடிவேலுவும் மீண்டும் புதிய படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்குகிறார். கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் நிதி சகாதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் துவங்குகிறது.
Prev Post