சோஷியல் மீடியா யூஸ் பண்ற எல்லோரும் பார்க்க வேண்டிய படம்: பிரியாலயா
அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில் கலையரசன் ஹீரோவாகவும், பிரியாலயா ஹீரோயின் ஆகவும் நடித்துள்ள படம் ட்ரெண்டிங். ராம் பிலிம் ஃபேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படம் வரும் 18 ஆம் தேதி வெளியாகிறது. இதை ஒட்டி நடந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில்,நடிகை பிரியாலயா பேசியது, இப்படம் ஆடிசன் முடிந்த போது சந்தோசத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது. ஆக்டிங் ஸ்கோப் உள்ள படம், இது ஒரு எமோசனல் ரோலர் கோஸ்டர். ஹீரோ கலையரசன்பெயரிலேயே கலைக்கு அரசன் என வைத்துள்ளார். உண்மையில் அவர் கலைக்கு அரசன் தான். இப்படத்திற்கு சாம் சி.எஸ் மிக அற்புதமாக தந்துள்ளார். சோஷியல் மீடியா யூஸ் பண்ற எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் என்றார்.
Next Post