Take a fresh look at your lifestyle.

போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் காதல் படம்

157

போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் காதல் படம்
இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் சென்னையில் பூஜை யுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தை பயர் பாக்ஸ் பிலிம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிக்கிறார். இதில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்,அருவி மதன், ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு ள்ளது.படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய,புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் வெளியாக உள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.