பொங்கள் ரேசில் குதிக்கும் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம்
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’ இதில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி, தீபக் ரவி ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜீவா பேசியது,இது ஒரு புது முயற்சி,ஒரு புது ட்ரீட்மென்ட்… புது வகையிலான நெரேட்டிவ்…வருணன் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
Prev Post
Next Post