Take a fresh look at your lifestyle.

கூலி- பட விமர்சனம்

62

கூலி- பட விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்தில், அமீர்கான், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சார்லி, காளி வெங்கட், திலீபன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
கதைக்களம்:-
விசாகப்பட்டினம் ஹார்பரில் லாஜிஸ்டிக்ஸ் தொழில் என்ற பெயரில் விலை உயர்ந்த தங்க கைக்கடிகாரங்கள் கடத்தல் தொழிலை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார் நாகார்ஜுனா. அவரிடம் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களை கண்காணிப்ப வராக சௌபின் ஷாகிர் இருக்கிறார். இவர்கள் செய்யும் கள்ள கடத்தல் தொழிலை கண்டுபிடிக்க போலீசார், காளி வெங்கட் உள்ளிட்ட ஒரு சில அண்டர் கவர் போலீசை அந்த டீமுக்குள் அனுப்பி வைக்கின்றனர். அவர்களை கண்டுபிடித்து கொலை செய்கிறார் சௌபின் ஷாகிர். அதோடு அவர்கள் கொலை செய்யும் ஆட்களை யாருக்கும் தெரியாமல் நவீன தொழில்நுட்ப மூலம் சாம்பலாக்கும் வேலையை சத்யராஜை வைத்து செய்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகள் சுருதிஹாசன் இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் மேன்ஷன் நடத்தி வரும் ரஜினிகாந்த், விசாகப்பட்டினத்தில் இருக்கும் தனது நண்பர் சத்யராஜ் இறந்த செய்தி கேட்டு அங்கு செல்கிறார். தனது நண்பர் சத்யராஜ் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்க தொடங்குகிறார். அப்போதுதான் சத்யராஜிடம் வேலை செய்த சார்லி மூலம் சில தகவல்கள் ரஜினிக்கு தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து சௌபின் ஷாகிர் மூலம் மீண்டும் அந்த வேலையை செய்ய சுருதிஹாசனுக்கு அழைப்பு வருகிறது. அப்போது சுருதிஹாசனுடன் ரஜினியும் அந்த ஹார்பர்களுக்குள் நுழைகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? ரஜினிக்கும் நாகார்ஜுனாவுக்கும் உள்ள தொடர்பு என்ன? சௌபின் சாஹிர் ஏன் சத்யராஜ் கொலை செய்தார்? சத்யராஜ், ரஜினிக்கும் இடையிலான உறவு என்ன என்பதே படத்தின் மீதி கதை.
ரஜினியை வைத்து ஒரு மாஸ் ஆக்சன் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார். அதிலும் இந்த வயதில் அவரை டான்ஸ் ஆட வைத்து சண்டை காட்சிகளில் செம மாஸ் ஆக நடிக்க வைத்துள்ளார். ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அவருடைய 50ம் ஆண்டில் கூலி படத்தை கொடுத்து புகழ் சேர்த்துள்ளார்.
ரஜினிகாந்த் முந்தைய படங்களை விட இதில் மிகவும் சுறுசுறுப்பாகவும், சற்று இளமையாகவும் தெரிகிறார். இளசுகளோடு சேர்ந்து அவரும் இளைஞராக மாறியுள்ளார்.
சௌபின் சாஹிர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். நாகார்ஜுனா ஸ்டைலான வில்லனாக மிரட்டி இருக்கிறார். நண்பர்களாக நடித்துள்ள உபேந்திரா மற்றும் சத்யராஜ் இருவரும் அளவான நடிப்பை தந்துள்ளனர். ரஜினியின் ஃபேன் பாய் போல் கிளைமாக்ஸ் காட்சிகள் அமீர்கான் வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சுருதிஹாசன் தனது முழு திறமையையும் காட்டி நடித்திருக்கிறார். இவர்களோடு படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது அனிருத்தின் இசை. இரண்டு பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. அதேபோல் கிரிஸ் கங்காதரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் படிச்சிடுகிறது. அனைத்து நடிகர்களும் திரையில் அழகாக தெரிகின்றனர்.

பிளஸ் & மைனஸ்
75 வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த்தை சரியாக பயன்படுத்தி இருப்பது சிறப்பு. அதிலும் அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ரஜினியிசம் காட்டி இருப்பது பிளஸ். மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டு அதை திருப்தி படுத்தாத வகையில் திரைக்கதை இல்லாதது மைனஸ். குறிப்பாக இரண்டாம் பாதியில் சில இடங்களில் காட்சிகள் தடுமாறி உள்ளது. அமீர்கான், நாகார்ஜுனா ஆகியோரை இன்னும் சரியாக பயன்படுத்தி இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

மொத்தத்தில்:கூலி- விசில் போட்டு கூப்பிடலாம்