வானரன்- பட விமர்சனம்
நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள படம் வானரன். பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தில் அக்ஷயா, லொல்லுசபா நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஷாஜகான் இசையமைத்துள்ளார். ஆரஞ்சு பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீராம் தயாரித்துள்ளார்.
மனைவியை இழந்து மகளுடன் வாழ்ந்து வரும் பிஜேஷ் நாகேஷ் ஆஞ்சநேயர் வேடமிட்டு வீதி வீதியாக காணிக்கை பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருடைய மகள் உயிர் பிழைக்க 4 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இந்தப் படத்துக்காக பலரிடம் கேட்டு கடைசியில் ஒருவர் மூலம் பணம் கிடைத்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அந்த பணமும் திருடு போகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. வறுமையுடன் தன் மகளுக்காக போராடும் உணர்வுப் பூர்வமான காட்சிகளில் பிஜேஷ் சிறப்பாக நடித்துள்ளார். அதே போல் விஜயகாந்த் டி ஆர் போன்று நடிக்கும் நடிகர்களும் அழகாக நடித்துள்ளனர். ஒரு சாதாரண கதையை உணர்ச்சி பொங்க ரசிக்கும்படியாக இயக்குனர் பத்மநாபன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
Prev Post