Take a fresh look at your lifestyle.

கஞ்சா விற்கும் பெண்ணாக நடித்துள்ள அனுஷ்கா

133

கஞ்சா விற்கும் பெண்ணாக நடித்துள்ள அனுஷ்கா
கிருஷ் ஜகர்லமுடி இயக்கத்தில், நடிகை அனுஷ்கா நடித்துள்ள ‘காட்டி’ படத்தின் பரபரப்பான டிரெய்லர் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
அனுஷ்கா ஷெட்டிக்கு வெயிட்டான கம்பேக் படமாக காட்டி அமையும் என கூறப்படுகிறது. தெலுங்கில் முதன் முதலாக அறிமுகமாகி உள்ள விக்ரம் பிரபு முதல் படத்திலேயே அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மருத்துவராகவும், அனுஷ்காவுடன் சேர்ந்துக் கொண்டு போராளியாகாவும் நடித்துள்ளார். அனுஷ்கா கஞ்சா விற்கும் பெண்ணாகவும், அதிலிருந்து அந்த மக்களை மீட்கும் புரட்சிப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.