Take a fresh look at your lifestyle.

செம ஹேப்பி மூடில் பிரியாலயா

64

செம ஹேப்பி மூடில் பிரியாலயா
சந்தானம் நடிப்பில் வெளியான இங்க நான் தான் கிங் படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் பிரியாலயா. தமிழ் பேசும் கதாநாயகி என்ற அந்தஸ்துடன் இன்டஸ்ட்ரிக்குள் நுழைந்த இவர் சிறந்த நாட்டிய கலைஞர் ஆவார். இதனால் அடுத்த படமும் அவருக்கு உடனே கிடைத்தது. கலையரசனுக்கு ஜோடியாக ட்ரெண்டிங் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியானது. இந்த நிலையில்
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க உள்ள ஹாரார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் கௌதம் இயக்க உள்ளார். இதனால் செம ஹேப்பி மூடில் பிரியாலயா இருக்கிறார்.