ரசிகர்களை கவர்ந்த மதராஸி புரோமோ வீடியோ
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மதராஸி இதில் ருக்மினி வசந்த் ஹீரோயினாக நடித்த, விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.புரோமோ வீடியோவில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர் முருகதாஸ், அனிருத் என் அனைவரும் லுங்கியுடன் இருக்கின்றனர். இவர்களோடு இந்த பாடலை எழுதியுள்ள சூப்பர் சுப்புவும் சேர்ந்து அட்ராசிட்டி செய்துள்ளனர். சலம்பலா என தொடங்கும் அந்த பாடலை அனிருத் இசையில், சாய் அபயங்கர் பாடியுள்ளார். பாடல் வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.