ரூ.5 கோடியை தாண்டிய கூலி பட டிக்கெட் விற்பனை
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் கூலி. இதில் சத்யராஜ், அமீர்கான்,நாகார்ஜூனா,உபேந்திரா,சவுபின் ஷாகீர் சுருதிஹாசன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.வரும் ஆகஸ்டு 14-ந் தேதி படம் வெளியாக உள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வெளி நாடுகளில் சமீபத்தில் தொடங்கியது.வேறு எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு கூலி படத்திற்கு அமெரிக்காவில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.போட்டி போட்டு கொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதனால் படம் வெளியாவதற்கு முன்பே ரூ.5 கோடிக்கு மேல் டிக்கெட் விற்பனை ஆகி சாதனை படைத்து உள்ளது.
Prev Post