Take a fresh look at your lifestyle.

மமிதா பைஜூவுக்கு போட்டியாக களமிறங்கும் அர்ஷா பைஜு

173

மமிதா பைஜூவுக்கு போட்டியாக களமிறங்கும் அர்ஷா பைஜு
மலையாளத்தில் ‘பேமிலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் அர்ஷா பைஜு.

அதன் பிறகு குர்பானி, மதுரா மனோகர மோகன், முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என பல படங்களில் நடித்து மல்லுட்டில் முன்னணி இளம் நடிகையாக உள்ளார்.

இவர் தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் தர்ஷன் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழில் அறிமுகமாவது குறித்து அர்ஷா பைஜு கூறியது, தமிழில் இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த கேரக்டர் கொடுத்த இயக்குனர் ராஜவேலுக்கு நன்றி.

தர்ஷன் சிறந்த கோ- ஆக்டர்.காளி வெங்கட், வினோதினி போன்ற திறமை வாய்ந்த நடிகர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. முதல் படத்திலேயே சிறப்பான குழுவோடு பணியாற்றி இருக்கிறேன் என்றார்.