Take a fresh look at your lifestyle.

ஹவுஸ் மேட்ஸ்’ படம் என் நீண்ட நாள் ஆசை: தர்ஷன்

148

ஹவுஸ் மேட்ஸ்’ படம் என் நீண்ட நாள் ஆசை: தர்ஷன்
இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ நடித்துள்ள படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாக இருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
இதில் நடிகர் தர்ஷன் பேசியது, “இதுபோன்ற கதையில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தில் அமைந்திருக்கிறது. டிரெய்லர் பார்த்துவிட்டு நிறைய பேர் ஹாரர் படமா என்று கேட்டார்கள். அதையும் தாண்டி என்கேஜிங்கான திரைக்கதையும் ஆச்சரியங்களும் கொண்ட ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் இது. காளி வெங்கட்வுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார்.