அண்டர் கவர் ஸ்பையாக நடிக்கும் விஜய் தேவரகொண்டா
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ‘கிங்டம்’. இதில் பாக்யஸ்ரீ போர்ஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு,
இந்தி ஆகிய மொழிகளில் இரண்டு பாகமாக வெளியாகும் இப்படம் வரும் 31ந் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், ‘கிங்டம்’ படத்தின் தமிழ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலரில் விஜய் தேவரகொண்டா ஒரு அண்டர் கவர் ஸ்பையாக நடித்துள்ளார்.
