Take a fresh look at your lifestyle.

ஊர்மிளாவாக நடிக்கும் சுரபிதாஸ்

183

ஊர்மிளாவாக நடிக்கும் சுரபிதாஸ்
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி
இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ராமாயணம்’. இதில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி , ராவணனாக யாஷ் நடிக்கின்றனர்.

ரவி துபே லட்சுமணனாக நடிக்கிறார். இந்நிலையில் ராமனின் தம்பி லட்சுமணன் மனைவி ஊர்மிளாவாக
அசாம் நடிகை சுரபிதாஸ் நடிக்கிறார். 27 வயதான சுரபி தாஸ் ராமாயணம் படத்தில் நடிக்க இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தை ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர்.