Take a fresh look at your lifestyle.

நடிப்பு என்பது தவம்: நிமிஷா சஜயன்

74

நடிப்பு என்பது தவம்: நிமிஷா சஜயன்
மலையாள நடிகையான நிமிஷா சஜயன், `சித்தா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். சமீபத்தில் அதர்வாவுடன் `டி.என்.ஏ.’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்று தந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், டி.என்.ஏ.’ படத்தில் எனக்கு அம்மா கதாபாத்திரம். ஆனால் எனக்கு திருமணம் ஆகவில்லை.

எனவே கதைக்கு ஏற்றபடி என்னை நான் தயார் படுத்திக் கொள்வேன்.அதற்கான எமோஷனலை எனக்குள் நானே ஏற்படுத்திக் கொள்வேன். நடிப்பு என்பது தவம். அதற்காக எவ்வளவு வேண்டுமானா லும் என்னை வருத்தி உழைக்கத் தயார். அந்த படத்தில் என் நடிப்பு சிறப்பாக இருப்பதாக அனைவருமே பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.