5 நிமிடத்தில் விட்டுத் தீர்ந்த கூலி டிக்கெட்
ரஜினி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கூலி’ இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘சிக்கிட்டு, மோனிகா, பவர் ஹவுஸ்’ என்ற மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் கூலி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது கூலி படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கி இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பெஸ்ட் பிளானோ சினிமா மார்க் என்ற தியேட்டரில் கூலி படத்தின் பிரிமியர் காட்சிக்கான மூன்று தியேட்டர்களின் மொத்த டிக்கெட்டுகளையும் அங்குள்ள டலாஸ் பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் வாங்கியுள்ளார்கள். இதனால் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
Prev Post
Next Post