பட்டய கிளப்பும் பவர் ஹவுஸ் பாட்டு
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. இதில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா,சவுபின் ஷாஹிர்,ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் வெளியாகிறது. ஏற்கனவே இதில் இடம் பிடித்துள்ள சிக்கிட்டு மற்றும் மோனிகா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 3-வது;பாடலான “பவர் ஹவுஸ்” என்ற பாடல் நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதில் லோகேஷ், அனிருத் கலந்து கொண்டனர். இப்பாடல் சோசியல் மீடியாவில ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Next Post