3 நாளில் போட்ட காசு வந்துவிட்டது: வெற்றி விழாவில் தமன் தகவல்
மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் வெளியான படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற தமன், ” என்து முந்திய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டை ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் கலெக்ஷன் கொடுத்துள்ளது. இங்கு 150 தியேட்டரில் தான் முதலில் படம் ரிலீஸ் ஆனது.மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200 முதல் 250 ஸ்கிரீன் தற்போது அதிகரித்தள்ளது என்றார்.
Next Post