ஆகஸ்ட் 2-ல் கூலி பட டிரைலர்
ரஜினி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள”கூலி” திரைப்படத்தில் அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா , ஸ்ருதி ஹாசன், சவுபின் ஷாஹிர் , சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி நடத்த
திட்டமிட்டுள்ளனர். இதனிடையே படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. ”கூலி” டிரெய்லர் ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று வெளியாக உள்ளதாகவும் அதுவரை படம் பற்றி எதையும் தான் பகிர விரும்பவில்லை என்றும் லோகேஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Next Post