Take a fresh look at your lifestyle.

இயக்குநர் நினைத்ததற்கு மேலே சிறப்பாக நடிப்பார் நித்யா மேனன்: விஜய் சேதுபதி

48

இயக்குநர் நினைத்ததற்கு மேலே சிறப்பாக நடிப்பார் நித்யா மேனன்: விஜய் சேதுபதி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் தலைவன் தலைவி. இந்த படத்துக்கு சுகுமார் ஒளி பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படம் வரும் 25-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பு விஜய் சேதுபதி பேசியது, நித்யா மேனுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது.

அப்படியொரு அற்புதமான நடிப்பை வழங்குபவர்.படப்பிடிப்புக்கு வந்தோம், நடித்தோம் என்று இயல்பாக கடந்து செல்ல மாட்டார். அதை முழுமையாக உணர்ந்து அந்த கேரக்டருக்கு என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என யோசித்து இயக்குநர் நினைத்ததற்கு மேலே திரையில் கொண்டு கொண்டு வந்து விடுவார் என்றார்