Take a fresh look at your lifestyle.

மோகன்லாலுக்காக படத்தை தள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

58

மோகன்லாலுக்காக படத்தை தள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது, மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு சுதா கொங்ரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் குட் நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தார். அந்தக் கதையில் அவரின் அப்பா கேரக்டரில் நடிக்க மோகன்லாலிடம் பேசி உள்ளனர். அவரும் நடிக்க சம்மதம் தெரிவித் திருந்தார். ஆனால், இப்போதைக்கு அவரால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. இதனால் அந்த படம் சற்று தள்ளி வைக்கப்படுகிறது. இதனால் வெங்கட்பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தேதி ஒதுக்கி உள்ளார்.இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.