கயாடுவுக்கு திருஷ்டி பட்டுடுச்சு போல..
டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் கயாடு லோகர். இதயம் முரளி படத்தில் அதர்வா ஜோடியாகவும், இம்மார்ட்டல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதோடு
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பூஜை போடப்பட்டது. ஆனால் அந்த படம் திடீரென கைவிடப்பட்டது . அதே போல விக்னேஷ் ராஜா இயக்க, தனுஷ் நடிக்கும் படத்திலும் கயாடு நடிப்பதாக
இருந்தது. ஆனால் மலையாளத்தில் டொவினோதாமசுடன் நடிப்பதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக மமீதா பைஜூ கமிட்டாகி விட்டார்.குறுகிய கால கட்டத்தில்
அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமான நடிகை கையாடு லோகருக்கு கண் திருஷ்டி பட்டது போல் இரண்டு படங்கள் கையை விட்டு போனதால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம் அம்மணி.


