Take a fresh look at your lifestyle.

ஹீரோவாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்

76

ஹீரோவாகும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்
சசிகுமார் – சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் பேமிலி என்ற படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். அதோடு படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தும் இருந்தார்.இந்த நிலையில் அடுத்து இவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த படத்தை டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ஒருவரே இயக்கப் போகிறாராம். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.