Take a fresh look at your lifestyle.

களத்தில் இறங்கிய நீதிபதி!!

52

களத்தில் இறங்கிய நீதிபதி!!

அம்பலமாகும் அஜித்குமார்
மரணத்தின் மொத்த
பின்னணி??

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உள்ளார்

திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் உதவி ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை அழைத்துச் சென்று விசாரித்த இடங்களில், நீதிபதி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்த, நீதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

முன்னதாக, இளைஞர் அஜித் மரண வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி நீதி விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. காவல் நிலையம், கோவில் என வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சிசிடிவி காட்சிகளும், பாதுகாக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்