Take a fresh look at your lifestyle.

லெஜெண்ட் சரவணனின் தீபாவளி சரவெடி

93

லெஜெண்ட் சரவணனின் தீபாவளி சரவெடி
தி லெஜெண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான லெஜெண்ட் சரவணன் தற்போது புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில் படம் குறித்து லெஜெண்ட் சரவணன் கூறியது, “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம். மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும் என்றார்.