ரீல்ஸ் போடும் ஜோடிகளுக்கான படம் ‘டிரெண்டிங்’
அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிரெண்டிங்’.இதில் கலையரசன், பிரியாலயா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி விஜய் அஜித் வரை ஏராளமான நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த கோவிந்தன் மகன் ஆனந்த் மற்றும் அவரது மனைவி மீனாட்சி இருவரும் தயாரித்துள்ளனர். வரும்
ஜூலை 18-ந் தேதி இப்படம் வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் கூறியது, இன்றைய சோசியல் மீடியா தான் இந்த படத்தின் மையக்கரு. இணையத்தில் ஜோடிகள் செய்து வரும் ரீல்ஸ் வீடியோவினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சந்திக்கும்
பிரச்சினையை கமர்ஷியல் கலந்து சொல்லி இருக்கிறோம். அதோடு பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு மெசேஜையும் சொல்லி உள்ளோம் என்றார்.