‘புஷ்பா2’ படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்று உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 1800 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சி யில் பிரீமியர் ஆனது.இப்படம், 5.1 டிவிஆர் ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘ஸ்ட்ரீ 2’, ‘பதான்’, ‘அனிமல்’ மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது.
Prev Post