விஜய் மிட்டன் படத்தில் அம்மு அபிராமி
தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வருகிறார். இதில் பரத், ஆரி, சுனில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க, பால் டப்பாவும் நடிகராக அறிமுகமாகிறார்.இந்த நிலையில், நடிகை அம்மு அபிராமி இதில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இதன் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளது.ஏற்கனவே, நடிகை அம்மு அபிராமி கோலி சோடா வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Post