அல்லு அர்ஜுன் ஜோடியான மிருணாள் தாகூர்
துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மிருணாள் தாகூர். இந்த படத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். அதன் பிறகு வெளியான ஹை நானா படமும் அவருக்கு வெற்றியை தந்தது.தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் பிரம்மாண்ட சயின்ஸ் பிக்சன் திரைப்படத்திலும் கமிட் ஆகி உள்ளார். ஏற்கனவே இதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.
Prev Post
Next Post


