Take a fresh look at your lifestyle.

மகன் இயக்கத்தில் நடிக்கும் பார்த்திபன்

101

மகன் இயக்கத்தில் நடிக்கும் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன்- சீதா தம்பதிக்கு கிர்த்தனா, அபிநயா என்ற 2 மகள்களும், ராக்கி என்ற மகனும் உள்ளனர். ஏற்கனவே கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தற்போது அவரது மகன் ராக்கி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இது குறித்து பார்த்திபன் கூறியது, இயக்குனர் விஜய் இடம் இயக்கமும்,ஒளிப்பதிவாளர் ஏகாவிடம் ஒளிப்பதிவும் கற்றுக்கொண்டு ஒரு கமர்சியல் திரில்லார் படத்தை இயக்க என் மகன் காத்துக் கொண்டிருக்கிறார்.அந்த படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பு தருவதாக வாக்களித்து இருக்கிறார். அதற்காக நானும், என் மகனும் ஆவலோடு காத்திருக்கிறோம் என்றார்.