பேய் படத்துக்கு டைட்டில் ‘பேய் கதை’
அறிமுக இயக்குனர் ஜுன் மோசஸ் இயக்க, அறிமுக நடிகர் வினோத் நடிப்பில் உருவாக உள்ள படம் பேய் கதை. இந்த படத்தை சர்வதேச சரக்கு போக்குவரத்து துறையில் முன்னணி தொழிலதிபரான ஜெர்ரி தயாரிக்கிறார். படம் குறித்து அவர் கூறியது, தமிழ் திரை உலகில் எத்தனையோ பேய் படங்கள் இதுவரை வந்திருந்தாலும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த ‘பேய் கதை’ படம் இருக்கும். அதனால் தான் இந்த ஹாரர் படத்திற்கு பேய் கதை என டைட்டில் வைத்துள்ளோம் என்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Prev Post
Next Post