Take a fresh look at your lifestyle.

கீர்த்தி சுரேஷ் கைவசம் இவ்வளவு படமா?

3

கீர்த்தி சுரேஷ் கைவசம் இவ்வளவு படமா?
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பிறகும், பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். அவரது சமீபத்திய படமான “டோரதி”, டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப் பட்டதோடு, திரைக்கு வந்த பிறகு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அடுத்து நானி நடிப்பில் வெளியான “தி பாரடைஸ்” படத்தில் அவர் நடனமாடியுள்ள “யேஷா நகுல” சிறப்புப் பாடல் பெரும் புகழ்பெற்று, அவரை மேலும் பிரபலபடுத்தியுள்ளது.இந்த படங்கள் தவிர, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து “ரவுடி ஜனார்த்தனா” என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கர்நாடகாவின் மைசூரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், அணில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும், “ஜனவரி 12 விடுதலை” படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர, தமிழில் “சத்தியவான் சாவித்திரி” படம் நவ.,20ல் ரிலீசாகிறது. ஹிந்தியில் “ரப்தார்”, மலையாளத்தில் “தோட்டம்” ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.