Take a fresh look at your lifestyle.

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்-விமர்சனம்

3

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்-விமர்சனம்

ஆம்புலன்ஸ் டிரைவரான பகத் பாசில்,கடத்தல் மன்னன் மகேஷ் மஞ்ச்ரேக்கருடன் பிரச்சனை   ஏற்பட்டு 3 நாட்களுக்குள் ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டிய நெருக் கடிக்கு ஆளாகிறார். அந்த நேரத்தில் ஒரு மேஜிக் லாக்கெட் அவருக்கு கிடைக்கிறது. அதிலிருந்து பேபி சாரா வெளிப்படுகி றார்.அந்த சிறுமி பகத் பாசிலுக்கு மட்டுமே தெரிகிறாள். அந்த சிறுமியின் மாய சக்தியை வைத்து பணம் சம்பாதிக்க பகத் பாசில் திட்டம் போடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாரஸ்யமான மீதி கதை. பகத் பாசில் வழக்கம் போல தனது தனித்துவமான நடிப்பைவெளிப்படுத்தி கவனம் பெறுகிறார். அவருக்கும் குழந்தைக்குமான பாண்டிங் படத்திற்கு பிளஸ்.பேபி சாரா படத்தில் மாயாஜால காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். மகேஷ் மஞ்ச்ரேக்கர்,சுப்பராஜு வெங்கடேஷ் ககுமானு ஆகியோர் சிறப்பாக செய்திருக்கிறார்கள். மனித உணர்வை வைத்து ஒரு பேண்டஸி படத்தை அழகாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஷசாங்க். கால பைரவாவின் இசைபெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்றாலும், சில இடங்களில் பின்னணி இசை வலு சேர்க்கிறது. கேமரா ஒர்க்படத்தின் இன்னொரு பலம்.