Take a fresh look at your lifestyle.

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் பயோபிக் படம்

2

ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் பயோபிக் படம்
திருச்சி அருகே உள்ள பொய்யாமணியில் பிறந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘சாய் பாதானந்தா’ படம் உருவாகியுள்ளது. ஷீரடி சாய் பாபாவின் மீது தீவிர பக்தி கொண்ட இவர் பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் நிறுவனராகவும், மதராஸ் அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் இருந்தார். ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி வாழ்ந்த வாழ்க்கையை கண் முன் நிறுத்தும் இப்படத்தை, ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி டிரஸ்ட் சார்பில் கிருஷ்ணகுமார் தயாரிக்க, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் வழிகாட்ட, பி. நித்தியானந்தம் இயக்கியுள்ளார்.அருண் டேவிட் ஒளிப்பதிவு செய்ய, அபிஷேக் ராஜு இசையமைத்துள் ளார். இதன் சிறப்புக் காட்சி திரையிடல் விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், இயக்குனர் சிறுத்தை சிவா,சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் தியாகராஜன், முன்னாள் காவல்துறை அதிகாரி தாமரைக்கண்ணன், ஆன்மீகப் பாடகர் வீரமணி ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.