Take a fresh look at your lifestyle.

தனுஷின் ஓம் பட ரிலீஸ் அப்டேட்

2

தனுஷின் ஓம் பட ரிலீஸ் அப்டேட்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள படம் ‘ஓம்’. இதில் மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். தனுசின் சொந்த நிறுவனமான தொண்டர் பார் தயாரித்துள்ள இப்படம் வரும் 16-ந் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரஜினி நடித்த ஜெயிலர் 2 படம் வருகிற 15-ந் தேதி வெளியாவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தள்ளி வைத்தார். அதோடு தீபாவளிக்கும் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ படம் ரிலீஸ் ஆக இருப்பதால் தீபாவளிக்கும் வராது என கூறியிருந்தார். இந்த நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் செய்தியை நேற்று படக்குழு அறிவித்தது. அதன்படி நவம்பர் மாதம் 20-ந் தேதி ‘ஓம்’ படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.