இசையமைப்பாளர்கள் ஒன்று சேரும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
தமிழ் திரைப்பட இசை கலைஞரர்கள் சங்கத்திற்க்கு புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக இசையமைப்பாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளுடன் பத்து மாடி கட்டிடத்தை கட்ட மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். சென்னை,ஹைதராபாத், குஜராத், சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி, அதில் வரும் வருமானத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இம்மாபெரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.