Take a fresh look at your lifestyle.

பத்தா டிரெய்லரில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி

5

பத்தா டிரெய்லரில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும் படம் பத்தா. இந்த படத்தை ஸ்டார் ஸ்டுடியோ, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் 80-களின் பின்னணி, நகைச்சுவை நிறைந்த காட்சிகள், குடும்ப உணர்வுகள் என பல சுவாரஸ்ய அம்சங்களை டிரெய்லர் விவரிக்கிறது.இதில் விஜய் சேதுபதியுடன், லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு சாய் அப்யங்கர்   இசையமைத்துள்ளார்.