கதை தேர்வில் நான் ஒரு பைத்தியக்காரி: அமலாபால்
பிரபல நடிகையான அமலா பால், தனது சினிமா வாழ்க்கை குறித்து அளித்த ஒரு பேட்டியில் கூறியது, சினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர்களில் மீண்டும் மீண்டும் நடிப்பதில் எனக்கு ஒருபோதும்
ஆர்வம் இருந்ததில்லை. கதைகளை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நான் ஒரு பைத்தியக்காரி ஆக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். என் சிந்தனை, போக்கு சற்று வித்தியாசமாக வே இருந்தது. வித்தியாசமான கதாபாத்திரங்களுக் காக ஏங்கிக் கொண்டிருப்பேன். கதைகள் எனக்கு வரும்போது முழுமையான திருப்தியை அளிப்பது சற்று கடினம். ஆடை படத்தில் காகிதங்களை மட்டும் அணிந்து கொண்டு நடிக்க ஒப்புக்கொள்ள கிட்டத்தட்ட 2 மாதம் எடுத்துக் கொண்டேன். எனக்கு அந்த கேரக்டர் மீது நம்பிக்கை ஏற்பட்டு, படைப்பாற்றலுடன் படமாக்கப்படும் என்று நான் உறுதியாக நம்பிய பிறகு நடித்தேன். மிகவும் யதார்த்தமாக இருந்த அந்த முழு அனுபவமும் என் திரை வாழ்வில் மிகுந்த
உற்சாகத்தை அளித்தது என்றார்.
Prev Post