Take a fresh look at your lifestyle.

தி கிராண்ட் மாஸ்டர் – விமர்சனம்

4

தி கிராண்ட் மாஸ்டர் – விமர்சனம்
கணவனை இழந்து சென்னையில் துப்புரவ வேலை செய்து அபர்ணதி தனது மகன் அஸ்வினை எப்படியாவது வக்கீலாக்க வேண்டும் என்ற கனவுடன் அரசு பள்ளியில் படிக்க வைத்த வருகிறார். ஆனால் அஸ்வின் படிப்பை விட செஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான். தடைகளைத் தாண்டி பள்ளி அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெறும் அஸ்வினுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அந்த ஏழை சிறுவனின் கிராண்ட் மாஸ்டர் கனவு பலித்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீது கதை. விளையாட்டில் ஏழை, பணக்காரன் என்ற பேதம் இல்லை, திறமை இருந்தால் உலகமே உன்னை திரும்பிப் பார்க்கும்! என்ற அழுத்தமான கருத்தை சதுரங்க களத்தில் சொல்ல முயற்சித்திருக் கிறார் இயக்குனர் வெற்றி செழியன். துப்புரவு பணியாளராக நடித்திருக்கும் அபர்ணதி படத்துக்கு பலம். லிங்கேஷ் தனது கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். சிறுவன் அஸ்வின் கதைக்கு அழகு. வில்லனாக சுரேஷ் மேனன் கவனம் பெறுகிறார். அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரின் ஒளிப்பதிவு மற்றும் தினேஷ் ஆண்டனியின் இசை படத்திற்கு பிளஸ்.