Take a fresh look at your lifestyle.

வெற்றியை தலையில் ஏத்திக்க மாட்டேன்: சூரி

5

வெற்றியை தலையில் ஏத்திக்க மாட்டேன்: சூரி
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. இதில் நிவின்பாலி, சூரி, அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர். எலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சூரி பேசியது,மண்டாடி படம் வந்ததிலிருந்து அது ரொம்ப பெருமையா இருக்கு, ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாய்ப்பையோ, இந்த வெற்றியையோ எதையும் மண்டையில் எடுத்து வச்சுக்கிட்டு விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆடாமல், அந்த வெற்றியை, அந்த மரியாதையை தலை வணங்கி எடுத்து ஓரமா வச்சுட்டு அடுத்த வேலைக்கு நான் எப்பவுமே ஓடிக்கிட்டே இருப்பேன் என்றார்.