Take a fresh look at your lifestyle.

ஆர்எக்ஸ் 100 நடிகர் கார்த்திகேயாவின் கம்பேக்

3

ஆர்எக்ஸ் 100 நடிகர் கார்த்திகேயாவின் கம்பேக்
‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ’கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் படத்தின் கிளிம்ப்ஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் உருவாக்குகிறார். இதில் ஹீரோவாக நடிப்பதுடன், இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி இப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். குடும்பத்தினர் இணைந்து தயாரிக்கும் இந்தத் படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. கார்த்திகேயா பாக்ஸராக நடிக்கும் இப்படத்திற்க்கு விஜய் புல்கான் இசையமைக்க,ஜெகதீஷ் சீகட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.