Take a fresh look at your lifestyle.

ஹாய்- விமர்சனம்

25

ஹாய்- விமர்சனம்
காதலித்து திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண் பார்க்கத் தொடங்குகின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறுகிறார் கவின்.மறுபுறம்,திருமண வாழ்க்கைக்குள் சிக்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என நினைக்கும் நயன்தாராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க,அவரும் வீட்டை விட்டு சென்னைக்கு வருகிறார். அங்கு சந்திக்கும் இருவரும் நண்பர்களாகப் பழக, கவினுக்கு நயன்தாரா மீது காதல் மலர்கிறது. இந்த சூழ்நிலையில் இருவரும் கணவன், மனைவி போல் நடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கவின் செய்தது என்ன? கவின் காதல் வென்றதா?
கணவன் மனைவியாக நடிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. கொங்கு இளைஞராக நடித்திருக்கும் கவின் ரசிக்க வைக்கிறார். நயன்தாரா, ஸ்டைலாக மட்டுமின்றி நடிப்பிலும் கவருகிறார். சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி கூட்டணி கலகலப்பு. ராதிகா, கே.பாக்யராஜ், பிரபு ஆகியோர் படத்துக்கு பலம். காதல்,உறவு மற்றும் உணர்வுகளை வைத்து எளிமையான காதல் கதையை நகைச்சுவை கலந்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன். திரைக்கதை கொஞ்சம் வீக் ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு,ஜென் மார்ட்டின் இசை சூப்பர்.